forex trading logo
"To help our friends and our school poor students***"

Recent News

2012 Meet

Rate this item
(1 Vote)

நண்பர்களுக்கு வணக்கம்,

நமது முன்னாள் மாணவர் அமைப்பின் நன்காம் ஆண்டு கூட்டம் கடந்த 16ஆம் தேதி நமது பள்ளி வளாகத்தில் இனிதே நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு நமது அமைப்பின் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்க, அமைப்பின் செயலாளர் திரு ரா.கருப்பசாமி அவர்கள் முன்னிலை ஏற்றார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக பள்ளியில் படித்து இன்று நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக பணியாற்றும் மதிப்புமிகு திரு Dr.சிவசுப்பிரமணியன் அவர்களும், நமது பள்ளியின் முதல் பேட்ச் மாணவருமான திரு சிவசண்முகம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கடந்த ஆண்டு பள்ளி இறுதி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு HSC மற்றும் SSLC தேர்வில் முதல் மதிப்பெண்களுக்கான முதல் பரிசு தொகையான முறையே ரூபாய் 3500 & 3000 தொகையை திரு சண்முகம் அவர்கள் போருப்பேற்றுக்கொன்டர்கள்.

இந்த ஆண்டு நன்கொடையாக ரூ 13500 ம், உறுப்பினர் சந்தாவாக ரூ 5600 ம் பெறப்பட்டது. மேலும் Sponshership ஆக சுமார் ரூ 4௦௦௦ மதிப்புள்ள பணிகள் நண்பர்களால் வழங்கப்பட்டது.

அமைப்பின் கணக்கு வழக்குகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

(Account Details)

இந்த ஆண்டு கூட்டத்தின் போது நமது அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.errsm.org மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

இந்நேரத்தில் இணையதள உருவாக்கத்தில் கடின உழைப்பை கொடுத்த நண்பர்கள் திரு தங்கபாண்டியன், திரு பா.விஜயகுமார்,திரு பொற்செழியன், திரு அ.முத்துகர்த்திகைராஜ், திரு மாணிக்கம் ஆகிய நண்பர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

இணையதளம் தொடர்பாக உங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் கூட்டத்தின்போது நம் நண்பர்களால் வழங்கப்பட்ட சில திட்ட முன்வரைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1. பள்ளி மாணவர்களுக்கு Career guidance programme நிகழ்ச்சி நடத்துவது

2.நவீனமான முழுக்க இணைய வசதியுடன் இணைந்த கணினி வழியிலான Virtual training class room வகுப்பறை கூடம் அமைப்பது.

3.மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க உதவுவது

4.மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுவது

5.மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

6.பள்ளியில் சுகாதார வசதிகள் மேம்பட முயற்சிகள்

7.மேலும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது

இப்படி நிறைய எண்ணங்கள் நம் அனைவரின் மனதிலும் பள்ளியின் வளர்சிக்காக உள்ளது.

இந்த ஆண்டு கூட்ட ஏற்பாட்டின் போது, அழைப்பிதழ் அனுப்பும்போது சில நண்பர்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற செய்தி அறிந்தோம், இந்த தவறுக்கு முதலில் அனைவரிடமும் விழா ஏற்பாட்டு குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு சில நண்பர்களே தொடர்ந்து விழா தொடர்பான ஏற்பாடுகளை செய்வதால் ஏற்பட்ட தொய்வுதான் இந்த தவறுதலுக்கு காரணம்.வரும் ஆண்டுகளில் விழா ஏற்பாடுகளை மற்ற நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் இன்னும் கூட்டத்தை சிறப்பாக நடத்தலாம்.

இதைப்போலவே அடுத்த கூட்டத்தை எப்படி திட்டமிட்டு சிறப்பாக நடத்தலாம் என்ற உங்கள் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன,

நண்பர்கள் அமைப்பின்னுடான தங்கள் தொடர்பை வலுப்படுத்த வேண்டுகிறேன், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கூட்டம் நடந்து முடிந்த பின்பு நாம் எல்லோரும் நம் அமைப்பை மறந்துவிடுகிறோம், தயவு செய்து நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகளை தொடர்புகொண்டு அமைப்பற்றி தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் நண்பர்கள் தங்களுடன் படித்த மாணவர்களை மட்டுமே தேடுகிறார்கள், பள்ளியில் படித்து வெளியான பின்பு அனைவருமே முன்னாள் மாணவர்களே...! தயவு செய்து நமக்குள்ளே ஆண்டு பிரிவினைகள் வேண்டாம்.

இந்த நிமிடத்தில்.....,

பள்ளியின் வளர்ச்சிக்கும் அமைப்பின் செயல்படுகளாகவும் நமது நண்பர்களால் நிறைய யோசனைகளும் திட்டங்களும் முன்வைக்கபடுகின்றன,அது மாணவர்கள் முன்னேற்றத்திற்காகவும் மற்றும் பள்ளி சம்பத்தப்பட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமாக இருந்தாலும், இந்த எண்ணங்களை முன்னெடுப்பதற்கு நம் அமைப்பிற்கு பலமான நிதி ஆதாரம் வேண்டும்(financial source and stability).

நமது அமைப்பில் ஏறத்தாழ 170-200 நண்பர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர், குறைந்தபட்சம் இவர்களில் 90 % நண்பர்கள் ஆண்டுதோறும் தவறாது உறுப்பினர் சந்தா செலுத்தினால் உதவியாக இருக்கும், அமைப்பின் சட்டப்படி By Laws ஆண்டுதோறும் அனைவரும் கட்டாயம் உறுப்பினர் சந்தா செலுத்த வேண்டும்.

இதை எளிதாக செயல்படுத்த ஒரு யோசனை, நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் ஆலங்குளம் பகுதிக்கு தொடர்புடயவர்களாகவே இருப்போம் ஆகையால் ஆலங்குளம் போகும்போது உங்கள் சந்தா கட்டணத்தை செலுத்தலாம், பின் வரும் இடங்களை நண்பர்கள் தொடர்புகொண்டு சந்தா செலுத்தலாம்

1.நமது பள்ளியில், தலைவர் ராதாகிருஷ்ணன்(9443012380) அவர்களிடம்,

2.செயலாளர் இரா.கருப்பசாமி அவர்களிடம் (9442324282 மலர் மெடிக்கல்)

3 பொருளாளர் அமிர்தராஜ் (9500401004) அவர்களிடம்

4 முத்துமாரி கடையில் 9786305233

5 V .ராஜேந்திரன் விஜய் ரெடிமேட்ஸ் கடையில்

சென்னையில் உள்ள நண்பர்கள் திரு பிள்ளயர்சாமி 9884869936 மற்றும் திரு சௌந்தரராஜன் 9884120660 அவர்களை தொடர்புகொண்டு சந்தாவை செலுத்தலாம்.

மேலும் நிதி சேர்ப்பின் தொடர்பில், சில நண்பர்கள் சந்தா தவிர்த்து கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க முன்வந்துள்ளார்கள்,

இவர்களுக்கு எனது சிறு வேண்டுகோள், ஒரு ஆண்டு மட்டும் ஒரு தொகையை கொடுத்துவிட்டு நின்றுவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் சிறு தொகையாக கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும் நமது நண்பர்களில் நிதி வசதியில் தன்னிறைவு அடைந்தவர்கள் கொஞ்சம் அதிகமாக நிதி கொடுத்து உதவலாம்.

வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை பெறுவதற்கு முயற்சி செய்யலாம்.

இந்த இடத்தில ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும், நண்பர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது என்பதே உண்மை.

இதை நண்பர்கள் புரிந்து கொண்டு அவர்களாகவே அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

வரும் ஆண்டு கூட்டங்களை சிறப்பாக நடத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்து தங்களால் முடிந்த பங்களிப்பை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அதற்காக அடுத்தடுத்த கூட்டங்களை ஒரு குறிப்பிட்ட ஆண்டு மாணவர்களின் ஆண்டாக அறிவித்து, அந்த ஆண்டில் படித்து வெளியேறிய மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் மலரும் நினைவுகளுக்கு மனம் சேர்க்கலாம்.

நம்மில் யாரவது சில நண்பர்கள் தங்கள் உடன் படித்த மாணவர்களின் தொடர்பு முகவரி அல்லது அலைபேசி எண்கள் இருந்தால் அதற்காக முயற்சி செய்யவும் நாம் தயாராக உள்ளோம்.

நம் பள்ளியில் செய்வதற்கு எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன அவற்றை எல்லாம் நம் அமைப்பின் மூலமாக செய்ய முடியும்

அதற்கு இன்றைய சூழலில் நமக்கு தேவை நம்மிடையேயான தொடர்ந்த மற்றும் பலமான தொடர்பும் மட்டுமே அதை நாம் நம் அமைப்பின் மூலமாக செயல்படுத்தலாம்.

இறுதியாக செஞ்சீனத்தின் தத்துவஞானி கன்புசியஸ் இன் வரிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்

“A thousand miles of journey starts with a single step”- Confucius

உங்கள் கருத்துக்களை எதிபார்த்து,

என்றும் தொடர்ந்த தொடர்பில்....

வெங்கடேஷ்.வெ

சிங்கப்பூர்

0065 8301460

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

 

Read 7501 times Last modified on Saturday, 10 March 2012 05:12

1 comment

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Site Visiter Details

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday15
mod_vvisit_counterYesterday25
mod_vvisit_counterThis week154
mod_vvisit_counterLast week374
mod_vvisit_counterThis month1114
mod_vvisit_counterLast month1407
mod_vvisit_counterAll days629495
Visitors Counter

Login






Copyright (c)2012 ERRSM Old Students Association.